உள்ளூர் செய்திகள்

கொளத்தூரில் தூக்குபோட்டு பெண் தற்கொலை

ராஜமங்கலம் போலீசார் ஹாஜிரா உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை கொளத்தூர், உமா மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஆசிக் அகமது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்த இவர் தற்போது வேலை இல்லாமல் வீட்டில் உள்ளார். இவரது மனைவி ஹாஜிரா (வயது 34). இவர்களுக்கு 9 மற்றும் 5 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

ஆசிக் அகமது நேற்று மாலை 2 பேரையும் டியூஷனில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் ஹாஜிரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ராஜமங்கலம் போலீசார் ஹாஜிரா உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஹாஜிராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.