சென்னை கே.கே நகர், அடுத்த ராணி அண்ணா நகர் குடியிருப்பை சேர்ந்தவர் சுகுமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மணிமேகலை. கணவருடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமேகலை தனது மகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த சுகுமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.