களக்காடு தலையணை 
உள்ளூர் செய்திகள்

களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தொடர்ந்து பெய்து வரும் மழையால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது.

மாலை மலர்

களக்காடு:

களக்காடு தலையணை நீர்வீழ்ச்சியில் குளுமை அதிகம் என்பதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையினால் தலையணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தலையணையில் குளிக்க களக்காடு வனத்துறையினர் தடை விதித்தனர்.

அதன் பின் வெள்ளம் தணிந்தது. இருப்பினும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது. கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தண்ணீர் வரத்து குறையாமல் பெருக்கெடுத்து ஓடியபடி உள்ளது.

இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆற்றின் கரையோரமாக நின்று குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.