நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ராசையா(வயது 75). இவர் கல்குவாரி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமிகள் 2 பேருக்கு ராசையா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். உடனே அந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசையாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.