கிண்டி சிறுவர் பூங்கா 
உள்ளூர் செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி - கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடல்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இரவுநேர ஊரடங்கு, ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 

இந்நிலையில், கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பூங்கா நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக பூங்கா நாளை முதல் மூடப்படும். நிலைமையை  அறிந்து அதன்படி பூங்கா திறப்பது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே, வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்...தமிழகம் முழுவதும் ஜனவரி 22ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்