உள்ளூர் செய்திகள்

திருவல்லிக்கேணியில் தி.மு.க. நிர்வாகி வீட்டில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை

ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இன்று திருவல்லிக்கேணியில் உள்ள பிரேம் ராஜா வீட்டுக்கு சென்றனர். பிரேம்ராஜா என்னென்ன தொழில்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது.

மாலை மலர்

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் பிரேம்ராஜா. இவர் திருவல்லிக்கேணி பகுதி தி.மு.க. பொருளாளராக உள்ளார்.

இவர் பல்வேறு தொழில்களையும் நடத்தி வந்தார். பிரேம் ஜி.எஸ்.டி. வரியை சரியாக கட்டுவதில்லை என்று ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இன்று திருவல்லிக்கேணியில் உள்ள பிரேம் ராஜா வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.

பிரேம்ராஜா என்னென்ன தொழில்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. வரி எவ்வளவு பாக்கி வைத்துள்ளார் என்பது தொடர்பாக சோதனைகளை செய்தனர். வீட்டில் இருந்த ஆவணங்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.