தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 
உள்ளூர் செய்திகள்

மதுரை சித்திரை திருவிழாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் இரங்கல்

திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்தார்.

இதில் மூச்சுத்திணறி 60 வயது மூதாட்டி மற்றும் 40 வயது ஆண் நபர் பரிதாபமாக இறந்தனர். ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில்தான் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-

மதுரை, சித்திரைத் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்,  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT