சிறுமி திருமணம் நிறுத்தம் 
உள்ளூர் செய்திகள்

மயிலம் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

மயிலம்:

சென்னை, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி மகன் ரஞ்சித், 28. இவருக்கும் மயிலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் வரும் 15ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், விழுப்புரம் சமூக நல ஆலோசகர்கள் விமலா, பிரியதர்ஷினி, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

 அதில், சிறுமிக்கு 16 வயது என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார். சிறுமியை மீட்டு விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.