செஞ்சியில் பறக்கும் படையினர் வாகன சோதனை 
உள்ளூர் செய்திகள்

செஞ்சியில் பறக்கும் படையினர் வாகன சோதனை

தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் திருவண்ணாமலை செஞ்சி திண்டிவனம் சாலை ஆகிய பகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாலை மலர்

செஞ்சி:

தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றனர. 

அதனடிப்படையில் செஞ்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மகாலட்சுமி செஞ்சி பேரூராட்சி தேர்தல் அலுவலர் ராமலிங்கம் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் செஞ்சி திருவண்ணாமலை செஞ்சி திண்டிவனம் சாலை ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்,