தூத்துக்குடி:
தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் ஜூலியட் (வயது 52). மீனவர். கடந்த 23-ந் தேதி ஜூலியட் உள்பட தூத்துக்குடியை சேர்ந்த 9 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடந்த சில நாட்களாக தங்கி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று அவர்கள் தூத்துக்குடி திரும்பினர். தூத்துக்குடியில் இருந்து 77 கடல் மைல் தொலைவில் விசைப்படகு வந்து கொண்டிருந்தபோது ஜூலியட் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தார்.
உடனடியாக அவருடன் சென்ற பிற மீனவர்கள் ஜூலியட்டை தேடி வருகின்றனர். இதையறிந்த கடலோர காவல்படையினரும் மீனவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.