சென்னை:
மீனம்பாக்கம் போக்குவரத்து போலீசில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் தனலட்சுமி.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஏட்டு தனலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கொரோனா பாதிப்பு குறையாமல் அதிகரித்தது.
இந்த நிலையில் ஏட்டு தனலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு சென்னை காவல்துறையில் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது சககாவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் நூற்றுக்கணக்கான காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டுத்தனிமையிலும், ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.