விஷம் 
உள்ளூர் செய்திகள்

நன்னிலம் அருகே வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தீராத வயிற்று வலி காரணமாக மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு (வயது 40) விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அய்யாவு இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.