திருவொற்றியூர்:
ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் வடிவேல். இவரும் திருவொற்றியூரை சேர்ந்த ராஜேஸ்வரியும் (வயது19) கடந்த 6 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரி பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இது தொடர்பாக அவரை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே வடிவேலுவை தாக்கியதாக ராஜேஸ்வரியின் சகோதரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.