பாம்பை தேடும் பணியில் தீயணைப்பு படையினர்...புதருக்குள் கிடந்த பாம்பு 
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாம்பு புகுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் கிழக்குப்பகுதியில் டீ கடைகள் உள்ளன.

இதன் அருகே ஏராளமாக செடிகள் வளர்ந்து முட்புதர் போல காட்சி அளித்தது. இந்நிலையில் இந்த முட்புதர் அருகே இன்று காலை வி‌ஷ பாம்பு சுருண்டு கிடந்தது.அதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அலறினார்கள்.

உடனே இதுகுறித்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர்.

அதற்குள் பாம்பை காணவில்லை. பாம்பு வேறு எங்கேயோ மறைந்துவிட்டதாக தெரிகிறது. தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் தேடிப்பார்த்தும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து பாம்பை தேடும் பணி நடந்து வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT