சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி 
உள்ளூர் செய்திகள்

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம்- பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்திற்காக பொதுமக்கள் நடைபெறுவதாக இருந்த கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி அறிவித்துள்ளார்.

மாலை மலர்

திருவொற்றியூர்:

எண்ணூரில் அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு புதிதாக 660 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி மற்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இது தொடர்பாக ஏற்கனவே பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வருகிற 25-ந் தேதி மீண்டும் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதை தொடர்ந்து இந்த கருத்து கேட்பு கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் விஜயாராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் 20-1-2022 நாளிட்ட செய்தி வெளியீட்டின்படி எர்ணாவூர் கிராமத்தில் எண்ணுர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக 25-ந் தேதி அன்று காலை 11 மணி அளவில் இ.டி.பி.எஸ். மெட்ரிகுலே‌ஷன் பள்ளி, எர்ணாவூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமானது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.