உள்ளூர் செய்திகள்

எண்ணூர் கடற்கரையில் தலையில் கல்லைப்போட்டு மீனவர் படுகொலை

முன்விரோதம் காரணமாக ரஞ்சித் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.நேற்று காலை முதல் ரஞ்சித் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சுற்றி வந்து உள்ளார்.

திருவொற்றியூர்:

எண்ணூர் நெட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 35).மீனவர். இவர் மனைவி, மகன்களை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் இன்று காலை நெட்டுக்குப்பம் கடற்கரையில் ரஞ்சித் பிணமாக கிடந்தார். அவர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்று உடனடியாக தெரிய வில்லை. முன்விரோதம் காரணமாக ரஞ்சித் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று காலை முதல் ரஞ்சித் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சுற்றி வந்து உள்ளார். இது தொடர்பாக அந்த நபரை பிடித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT