திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வரதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கீர்த்தனா (வயது30).
இவர் துணி துவைத்து விட்டு அதனை வீட்டின் வெளியே காய வைத்தார். அருகில் இருந்த கேபிள் டி.வி. வயரில் ஈரமான துணிபட்டது. இதில் கீர்த்தனா மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
இதுபற்றி அறிந்ததும் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதித்தனர். ஆனால் கீர்த்தனா ஏற்கனவே மின்சாரம் தாக்கியதில் இறந்து இருப்பது தெரிந்தது.
திருவள்ளூர் தாலுகா போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.