எலக்ட்ரிக் பைக் தீ பிடித்து எரிந்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் இன்று எலக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

எலக்ட்ரிக் பைக்குகள் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் கோளாறு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் எலக்ட்ரிக் பைக் வைத்து இருப்பவர்கள் பெரும் அதிர்ச்சியில் பயனித்து வருகின்றனர்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி அருகே தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக எலக்ட்ரிக் பைக்கை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென எலக்ட்ரிக் பைக் சீட் கீழ் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ், பைக்கை நிறுத்திவிட்டு சீட்டை திறந்து பார்த்தார். அப்போது தீ கொழுந்துவிட்டு எரிந்தவாறு கரும்புகை மளமளவென்று பரவியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அதிபர் மாளிகையை நெருங்கி வந்தனர்- ரஷிய படையிடம் சிக்காமல் தப்பிய ஜெலன்ஸ்கி