வானூர்:
புதுவை மாநிலம் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 64).
இவருக்கு கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி இருந்துவந்தது. ஆஸ்பத்திரியில் காண்பித்தும் நோய் தீரவில்லை. எனவே கருப்பசாமி தற்கொலை செய்வது என்று முடிவு செய்தார்.
அதன்படி நேற்று மாலை ஆரோவில் கடற்கரைக்கு வந்தார். பின்னர் கடலில் குதித்தார். உடனே அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. தகவல் அறிந்த ஏராளமான மீனவர்கள் வந்தனர்.
அவர்கள் கடலில் படகு மூலம் கருப்பசாமியை தேடினர். ஆனால் கருப்பசாமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை கருப்பசாமி உடல் கரை ஒதுங்கியது. இதுபற்றி அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.