பணியில் இருக்கும் போது டிரைவர்கள் செல்போன் பயன்படுத்த தடை 
உள்ளூர் செய்திகள்

பணியில் இருக்கும் போது டிரைவர்கள் செல்போன் பயன்படுத்த தடை

நடத்துநர் பகல் நேரங்களில் முன் இருக்கையில் அமராமல் பின்புறம் கடைசி இருக்கையில் அமர்ந்து இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்துக்கழகம் கூறியுள்ளது.

மாலை மலர்

சென்னை:

போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதாலும், நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்து உரையாடுவதாலும் அதிக விபத்து ஏற்படுகிறது.

ஓட்டுநர்கள் பணியின் போது சட்டையின் மேல் பாக்கெட்டில் செல்போன் வைத்திருக்க கூடாது. அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிவடைந்த பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நடத்துநர் பகல் நேரங்களில் முன் இருக்கையில் அமராமல் பின்புறம் கடைசி இருக்கையில் அமர்ந்து இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும்.

பணி நேரத்தில் ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...லதா மங்கேஷ்கருக்கு இரங்கல்: மாநிலங்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு