கொலை மிரட்டல் 
உள்ளூர் செய்திகள்

மனைவியின் செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பியதை தட்டி கேட்ட கணவருக்கு கொலை மிரட்டல்

மேல்மலையனூர் அருகே மனைவியின் செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பியதை தட்டி கேட்ட கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

மேல்மலையனூர்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே ஈச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரணிதரன். அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது30). இவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு விவகாரத்து கேட்டு பின்பு சமாதானமாகி குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஜெயலட்சுமிக்கும். அதே கிராமத்தை சேர்ந்த அருள்முருகன், திருமங்கை மன்னன் உள்ளிட்ட 3 பேருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் ஜெயலட்சுமியின் செல்போனுக்கு ஆபாச படங்களை அவ்வப்போது அனுப்பி வந்துள்ளனர். இதனால் பரணிதரன், ஜெயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று 3 பேரும் ஆபாச படங்களை அனுப்பி உள்ளனர். இதை தட்டிக் கேட்டதால் ஜெயலட்சுமி கோபித்துக் கொண்டு நெகனூர் பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த அருள் முருகன்,திருமங்கை மன்னன் உள்ளிட்ட 6 பேர் பரணிதரன் வீட்டிற்குச் சென்று ஆபாசமாகதிட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பரணிதரன் கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் மீது வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.