உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் கல்லூரி மாணவி தற்கொலை

தற்கொலை செய்த மாணவியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ராசிபாளையம் ஊராட்சி மாமரத்துப்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். லாரி டிரைவர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு மோகன்ராஜ் (26) என்ற மகனும், சந்தியா (21) என்ற மகளும் உள்ளனர்.

சந்தியா நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுப்பற்றி தெரியவந்ததம் மோகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.