கடலில் மூழ்கி உயிரிழப்பு 
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய 2 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியது

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியது. 2 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் அடுத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது18). இவர் செங்கல்பட்டில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர் நண்பர்களுடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அப்போது கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தார். இதில் ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மாயமானார். அவரை தேடி வந்தனர்.

ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் தோட்டாபவன் கல்யாண் (வயது20). செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். நண்பர்களுடன் நேற்று மாலை அவர் கடற்கரை கோவில் அருகே குளித்தபோது கடலில் மூழ்கி மாயமானார். அவரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை ரமேஷ் உடல் புலிக்குகை அடுத்த பட்டிப்புலம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதே போல் கல்யாண் உடலும் கரை ஒதுங்கியது. 2 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.