சங்கராபுரம்:
சங்கராபுரம் பஸ் நிலையத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் நிலையத்தில் இறங்கி பள்ளிக்கும்-கல்லூரிக்கும் தினமும் சென்று வருவது வழக்கம்.இந்நிலையில் நேற்று காலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவனும், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவரும் பஸ் நிலையத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்பு அடிதடியாக மாறியதாக தெரிகிறது.
தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பு மாணவனையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு மாணவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.விசாரணையில் ஒரே பெண்ணை கல்லூரி மாணவனும்,பள்ளி மாணவனும் காதலிப்பதாக தெரிகிறது இதனால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பஸ் நிலையத்தில் தினமும் பள்ளி மாணவர்கள் - மாணவிகள் அதிகமாக வந்து செல்வதால் பிரச்சனைகள் ஏற்படாவண்ணம் பஸ்நிலையத்தில் புறகாவல் நிலையம் அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.