கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை 8344280895 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாலை மலர்

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2021-2022 ஆம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2,00,000 லிருந்து ரூ.2,50,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவ / மாணவிகளுக்கு இலவச கல்விதிட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், 2021-22ம் ஆண்டிற்கான முதுகலை (எம்.ஏ., எம்.காம், எம்.எஸ்.ஸி, எம்.பில்., எம்.பி.ஏ., பி.எச்.டி., ) பாலிடெக்னிக் (டிப்ளமோ - மூன்றாண்டு பட்டயப்படிப்பு) தொழிற்படிப்பு (மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்.., கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற மருத்துவ பிரிவுகளுக்கும், வேளாண்மை, பொறியியல், சட்டம்) போன்ற படிப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை 8344280895 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்க மின்னஞ்சல் முகவரி dir-bcmw@nic.in மற்றும் தொலைபேசி எண் 044-29515942 மூலம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.