சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
திராவிடமாடல் எனும் மக்கள் நல நிர்வாகத்திற்கு அடித்தளமிட்ட நீதிக்கட்சியின் முதன்மையான தலைவரும், சென்னை மாநகராட்சியின் தலைவராகப் பணியாற்றிய வரும், மாநகராட்சிப் பள்ளியில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திக் கல்விச்சுடரை ஏற்றியவருமான ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் பிறந்தநாள் இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைச் சென்னைவாசிகள் எனக்கு வழங்கியபோது, ரிப்பன் கட்டடத்தின் முகப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திப் பணியினைத் தொடங்கியதை நினைவில் கொள்கிறேன்.
தீரமிக்க திராவிடத் தலைவர் தியாகராயர் புகழ் போற்றி, அனைவருக்கும் அனைத்தும் என்ற லட்சியத்துடன் மக்கள் நலப்பணியினைத் தொடர்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.