உள்ளூர் செய்திகள்

முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தங்களது சொல் நயமும், ஈர்ப்பும் எப்போதும் ஒளிவீசிக் கொண்டு இருந்து வந்துள்ளது.சிறப்பான நாளில் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடுவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

அரசியல் கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரிடமும் நட்பு பாராட்டும் உங்கள் திறத்துடன், தங்களது சொல் நயமும், ஈர்ப்பும் எப்போதும் ஒளிவீசிக் கொண்டு இருந்து வந்துள்ளது.

இந்தச் சிறப்பான நாளில் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.