தலைமைச் செயலாளர் இறையன்பு 
உள்ளூர் செய்திகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்களது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

* தமிழகத்தில் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

* ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்களது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.