சென்னை:
கார்த்திகை மாதம் என்பதால் கறிக்கோழி விலை சரிந்துள்ளது.
கறிக்கோழி விலையை பொறுத்தவரை சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் விலை ஏறுவதும், மற்ற நாட்களில் குறைவதுமாக உள்ளது.
இந்த நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கிய நாளில் இருந்தே கறிக்கோழியின் விலை குறைந்துள்ளது. இது தொடர்பாக சென்னை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் ஞானசெல்வம் கூறும் போது, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ரூ.20 முதல் ரூ. 40 வரை குறைந்துள்ளது.
சில இடங்களில் ரூ.200-க்கும், ஒருசில பகுதிகளில் ரூ.180-க்கும் விற்பனை ஆகிறது என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் இந்த விலை நாளையும், நாளை மறுநாளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் அவர் கூறினார்.
நாளை கறிக்கோழி விலை ரூ.6 அளவுக்கு உயரும் என்று கறிக்கோழி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.