உள்ளூர் செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலையில் கண்டெய்னர்-கார் நேருக்கு நேர் மோதல்: பெண் உட்பட இருவர் பலி

சென்னை நோக்கி வந்த கார் மீது கடலூர் நோக்கி மீன் ஏற்றி சென்ற மினி கண்டெய்னர் வேன் நேருக்கு நேர் மோதியது. விபத்து நடந்த பகுதி வளைவானது என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் இரண்டு வாகனமும் வேக கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

மாலை மலர்

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அடுத்த வாயலூர் கள்ளுக்கடை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு 9 மணிக்கு, சென்னை நோக்கி வந்த கார் மீது கடலூர் நோக்கி மீன் ஏற்றி சென்ற மினி கண்டெய்னர் வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த சபீர்பாஷா, (வயது26) உடன் பயணித்த அதே பகுதியை சேர்ந்த பெண் நூர் ரிஷ்வானா (வயது.49) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரில் பயணித்த மற்ற 3 பெண்களும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை சதுரங்கபட்டினம் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து நடந்த பகுதி வளைவானது என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் இரண்டு வாகனமும் வேக கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.