உள்ளூர் செய்திகள்

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

2022-ம் ஆண்டு விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/t/forms/dept name/1 என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

சென்னை :

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலர் அரிய தொண்டாற்றி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2022-ம் ஆண்டு விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/t/forms/dept name/1 என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT