உள்ளூர் செய்திகள்

பவானி அருகே மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் பலி

தங்கவேல் உடல் பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலை மலர்

பவானி:

பவானி அருகே உள்ள சேர்வராயன்பாளையம் அப்துல் கலாம் வீதியை சேர்ந்தவர் தங்கவேல் (50). இவர் மின்வாரிய பவானி மேற்கு அலுவலகத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர் இன்று அதிகாலை பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பர்மரில் மின் பழுது ஏற்பட்டு உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவர் மற்றும் சந்திரன் ஆகியோர் பழுதை சரி செய்ய சென்றனர். அப்போது சந்திரன் கீழே நின்று கொண்டு இருந்தார்.

தங்கவேல் டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது சரிசெய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து தங்கவேல் உடல் பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.