தீ 
உள்ளூர் செய்திகள்

அம்பத்தூரில் பேக்கரி கடையில் தீ விபத்து

அம்பத்தூரில் பேக்கரியில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அம்பத்தூரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார். இன்று அதிகாலை 5 மணி அளவில் பூட்டி கிடந்த பேக்கரி கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவரகள் சுமார் ஒரு மணி நேரம் போராடி அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர்.

SCROLL FOR NEXT