ஆவடி:
ஆவடி பஸ் நிலையத்தில் மிட்டனமல்லி செல்லக்கூடிய அரசு மினி பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது மது போதையில் இருந்த இன்பன்ராஜ் என்பவர் கையில் ஒரு இரும்பு சங்கிலி வைத்து பஸ்சின் இடது புறம் உள்ள கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். பின்னர் சாலையில் படுத்து கால் மீது கால் போட்டு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் அவரை பிடித்து ஆவடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.