நாகசாமி 
உள்ளூர் செய்திகள்

தொல்லியல், கல்வெட்டுத் துறையின் முதுபெரும் ஆய்வாளர் நாகசாமி காலமானார்

தொல்லியல் துறை மற்றும் கல்வெட்டு ஆய்வாளரான நாகசாமியின் பணிகளைப் பாராட்டி மத்திய அரசு 2018-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

மாலை மலர்

சென்னை:

தொல்லியல் மற்றும் கல்வெட்டுத் துறையில் முதுபெரும் ஆய்வாளருமான நாகசாமி (91), உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழியில் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர். டெக்கான் கல்லூரியில் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்த ஆர். நாகசாமி, 1959 முதல் 1963 முடிய சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக பணியில் சேர்ந்தார். 1963 முதல் 1966 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும், பின்னர் 1966 முதல் 1988 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக இருந்தவர்.