சென்னை:
2021-22-ம் ஆண்டுக்கான ஓவியப் போட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தின் வழியாக நடத்தப்பட உள்ளது. திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவியங்களை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள படைப்பாளர்களிடம் இருந்து பெற்று நடுவர் குழு மூலம் தெரிவு செய்யப்பட்டு சிறந்த 15 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. படைப்பொன்றுக்கு ரூ.40 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கவுள்ள ஓவியங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். ஓவியங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 30.11.2022 மாலை 5.30 மணி. மேலும் விவரங்களுக்கு இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச்சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113, தொலைபேசி 044-22542992-ல் தொடர்பு கொள்ளலாம்.