முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 
உள்ளூர் செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே 2 வழக்குகள் பதிவான நிலையில், இன்று மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

இது தொடர்பான புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 10 பிரிவின் கீழ் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெயக்குமாரின்  ஜாமீன் மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின் முடிவில், ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஜெயக்குமார் மீது ஏற்கனவே 2 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இன்று மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகேஷ் என்பவர் ரூ.5 கோடி மதிப்புள்ள தனது தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிரட்டி அபகரித்துக் கொண்டதாக போலீசில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொலை மிரட்டல், குற்றச்சதி, அத்துமீறி நுழைதல், குற்றத்தை தூண்டுதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் மீதும் மோசடி வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.