வீ. கே. புதூர்:
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏரி, குளங்கள் கிணறுகள் நிரம்பிய நிலையில் திசையன்விளை அருகே ஒரு கிணறு மட்டும் முழு கொள்ளளவை எட்டவில்லை.
இந்த அதிசய கிணறை பொதுமக்கள் பார்த்து சென்றனர். மேலும் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ஊத்துமலை ஏந்தலூர் கிராமத்தில் தெற்கு தெருவைச் சேர்ந்த விவசாயி முருகராஜ் (வயது63) என்பவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் விவசாயத்திற்காக 66 அடி ஆழம் கொண்ட கிணற்றை தோண்டி அதன் மூலம் விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சி பயன்படுத்தி வந்தார்.
தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஏந்தலூர் கிராமம் அருகே உள்ள கல்கெட்டு குளம் முழுவதுமாக நிரம்பி முருகராஜ் விவசாய நிலத்திற்குள் வெள்ளம் சூழ்ந்தது. விவசாய நிலத்திற்குள் தண்ணீர் சூழ்ந்தாலும் நிலத்தின் மையப்பகுதியில் இருந்த கிணற்றுக்குள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் பாய்ந்து கொண்டே இருந்தது. எனினும் அங்குள்ள கிணற்றில் தண்ணீர் பாதி அளவை தாண்டாமல் தொடர்ந்து எப்பொழுதும் இருப்பதைப் போன்றே காணப்படுகிறது.
இந்த அதிசய கிணறு தற்போது தென்காசி மாவட்டத்தில் பலர் வந்து பார்த்து செல்கின்றனர்.
இதையும் படியுங்கள்... ஸ்ரீநகரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல்- மு.க.ஸ்டாலின் கண்டனம்