அஜித் 
உள்ளூர் செய்திகள்

போலீஸ் ரோந்து வாகனம் மீது தாக்குதல்: பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அஜித் ரசிகர் ஆத்திரம்

திருச்சி அருகே நள்ளிரவில் பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ் ரோந்து வாகனம் மீது அஜித் ரசிகர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி:

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிய படம் வலிமை. இந்த படத்தின் படப்பிப்பு 2019-ம் ஆண்டு தொடங்கியது. கொரோனா ஊரடங்கால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு வரவேற்பு தெரிவித்து அவரது ரசிகர்கள் பேனர் வைக்க திட்டமிட்டனர். அதன்படி இ.பி. ரோடு பகுதியை சேர்ந்த சில ரசிகர்கள் அப்பகுதியில் பேனர் வைக்க சென்றார். அப்போது அங்கு வந்த ரோந்து போலீசார் ஐகோர்ட் தடை ஆணையை சுட்டிக்காட்டி பேனர் வைக்க கூடாது என்றனர். இதையடுத்து ஒரு ரசிகர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் ஆத்திரமடைந்த அந்த ரசிகர், ரோந்து வாகனத்தின் கண்ணாடியில் கையால் ஓங்கி அடித்து விட்டு தப்பி ஓடினார். இதில் ரோந்து வாகனத்தின் கண்ணாடி நொறுங்கியதாக தெரிகிறது . இதுபற்றி கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த ரசிகரை தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் போலீஸ் ரோந்து வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT