எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் 
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 41 பேர் போட்டியின்றி தேர்வு- முதல் பட்டியல் வெளியீடு

முதல்கட்டமாக 41 மாவட்டங்களுக்கான பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.

சென்னை:

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 21, 25 ஆகிய தேதிகளில் 75 மாவட்ட கழகங்களுக்கு நடந்த தேர்தலில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதில் முதல்கட்டமாக 41 மாவட்டங்களுக்கான பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டனர்.

புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர்கள் இன்று முதல் பொறுப்புகளை ஏற்று பணியாற்றிட அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அதில் கூறியுள்ளனர்.

போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்கள் விவரம் வருமாறு:-

தேனி மாவட்ட செயலாளர்-சையதுகான், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்க டேஷ்பாபு, வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர்- நா.பாலகங்கா, தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர்-விருகை வி.என்.ரவி, சென்னை புறநகர் மாவட்ட செயலாளர்-கே.பி.கந்தன்.

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்-வி.சோமசுந்தரம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர்- எஸ்.ஆறுமுகம், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பா.பென்ஜமின், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர்- வி.அலெக்சாண்டர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்- மாதவரம் வி.மூர்த்தி.

வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் அப்பு, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர்-வேலழகன், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்-கே.சி.வீரமணி, ராணிப்பேட்டை- சு.ரவி, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்- தூசி கே.மோகன், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்-அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, கடலூர் கிழக்கு மாவட்டம்- கே.ஏ. பாண்டியன், கடலூர் தெற்கு மாவட்டம்-சொரத்தூர் ராஜேந்திரன், விழுப்புரம் மாவட்டம்- சி.வி.சண்முகம்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்-கே.அசோக்குமார், நாமக்கல் மாவட்டம்-பி.தங்கமணி, ஈரோடு புறநகர் மாவட்டம்- கே.ஏ.செங்கோட்டையன், கோவை புறநகர் வடக்கு மாவட்டம்-அருண் குமார், கோவை புறநகர் தெற்கு மாவட்டம்- எஸ்.பி. வேலுமணி, திருச்சி புறநகர் மாவட்டம்- பரஞ்ஜோதி, அரியலூர் மாவட்டம்- எஸ்.ராஜேந்திரன், நாகப்பட்டினம் மாவட்டம்- ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்டம்- எஸ்.பவுன்ராஜ்.

திருவாரூர் மாவட்டம்- ஆர்.காமராஜ், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்- ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் மாவட்டம்- திண்டுக்கல் சீனிவாசன், விருதுநகர் மாவட்டம்- ரவிச்சந்திரன், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, திருநெல்வேலி மாவட்டம்- கணேசராஜா, தென்காசி வடக்கு மாவட்டம்- கிருஷ்ண மூர்த்தி, தென்காசி தெற்கு மாவட்டம்- செல்வமோகன் தாஸ்பாண்டியன்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம்-கடம்பூர் ராஜூ தூத்துக்குடி தெற்கு மாவட் டம்- எஸ்.பி. சண்முகநாதன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்-எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.