கொள்ளை 
உள்ளூர் செய்திகள்

அசோக் நகரில் ஆவின் பாலகத்தில் கொள்ளை

அசோக் நகரில் ஆவின் பாலகத்தில் ஷட்டர் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்.  இவர் அசோக் நகர் 4-வது அவின்யூவில் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். அதிகாலை கடை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அசோக் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.