திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த ஒதிக்காடு கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு சுமார் 15 கிலோ எடை கொண்ட பித்தளையால் ஆன மணி பொருத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு வந்த மர்ம கும்பல் தேவாலயத்தில் இருந்த 15 கிலோ பித்தளை மணியை திருடி தூக்கிச்சென்று விட்டனர்.
இன்று காலை தேவாலயத்துக்கு பக்தர்கள் பிரார்த்தனைக்கு வந்த போது கோவில் இருந்த மணி திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தேவாலயத்திற்குள் புகுந்து மர்ம கும்பல் பித்தளை மணியை தூக்கிச்சென்ற சம்பவம் பரரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.