போலீஸ்காரர் மீது வழக்கு 
உள்ளூர் செய்திகள்

மனைவியை வீட்டைவிட்டு விரட்டிய சென்னை போலீஸ்காரர் மீது வழக்கு

ஏற்கனவே திருமணமானதை மறைத்து, பேஸ்புக் மூலம் பழகி, என்னை ஏமாற்றி விட்டார் என்று சென்னை போலீஸ்காரர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மாலை மலர்

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவருக்கும் ஓமலூர் அருகே உள்ள அரியாம்பட்டியை சேர்ந்த சின்னகவுண்டர் என்பவர் 2 ஆண்டுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழகியுள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.தகராறு முற்றியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இனி உன்னுடன் வாழ முடியாது என்று கூறி ஸ்ரீதேவியை சின்னகவுண்டர் வீட்டைவிட்டு விரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதேவி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்- இன்ஸ்பெக்டர் செல்வமணி வழக்கு பதிவு செய்தார். இந்த புகார் குறித்து ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா விசாரணை நடத்தி வருகிறார்.

இதனிடையே போலீஸ்காரர் சின்னகவுண்டர் ஒரு புகார் அளித்தார். அதில் ஸ்ரீதேவி, தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து, பேஸ்புக் மூலம் பழகி, என்னை ஏமாற்றி விட்டார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பேரில் ஸ்ரீதேவி மீதும் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.