கொரோனா தடுப்பூசி 
உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 63¼ லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை- மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

தமிழகத்தில் 63 லட்சத்து 28 ஆயிரத்து 328 பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை கூட செலுத்திக்கொள்ளாமல் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 64 லட்சத்து 2 ஆயிரம் ஆகும். இதில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் 6 கோடியே 12 லட்சத்து 37 ஆயிரம் பேர்.

தமிழகத்தில் இதுவரை 93 லட்சத்து 20 ஆயிரத்து 839 பேர் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 77 லட்சத்து 2 ஆயிரத்து 267 பேரும், கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தாதவர்கள் 16 லட்சத்து 18 ஆயிரத்து 572 பேரும் அடங்குவர்.

மேலும் 63 லட்சத்து 28 ஆயிரத்து 328 பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை கூட செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.