விபத்து ஏற்பட்ட கல்குவாரியில் மீட்பு பணி 
உள்ளூர் செய்திகள்

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 3-வது நபர் உயிருடன் மீட்பு

கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 6 பேரில் இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கற்குவியலுக்குள் சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை பொன்னாக்குடி அருகே அமைந்துள்ள கல்குவாரியில் நேற்று இரவு பாறை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கல்குவாரியில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கல்குவாரியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர், ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், கல்குவாரி கற்குவியலுக்குள் சிக்கிய மூன்றாவது நபர் செல்வம் என்பவர் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். பொக்லைன் இயந்திரத்தின் கீழ் கற்குவியலில் சிக்கியிருந்த செல்வத்தை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர்.

கற்குவியலுக்கு அடியில் சிக்கியிருந்த செல்வம் சுமார் 17 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 6 பேரில் இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கற்குவியலுக்குள் சிக்கிய மேலும் 3 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு