கல்குவாரி விபத்தில் உயிரிழந்த நபர் 
உள்ளூர் செய்திகள்

நெல்லை கல்குவாரி விபத்து: உயிருடன் மீட்கப்பட்ட 3-வது நபர் சிகிச்சை பலனின்றி பலி

கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 6 பேரில் இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை பொன்னாக்குடி அருகே அமைந்துள்ள கல்குவாரியில் நேற்று இரவு பாறை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கல்குவாரியில் இருந்து  ஏற்கனவே 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாவது நபர் செல்வம் என்பவரை சற்று நேரத்திற்கு முன்பு மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். பின்னர், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொக்லைன் இயந்திரத்தின் அடியில் கற்குவியலில் சிக்கியிருந்த செல்வத்தை சுமார் 17 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு குழுவினர் மீட்டனர்.

தொடர்ந்து, கற்குவியலுக்குள் சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடும் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி