நகைகள் பறிமுதல் (கோப்புப்படம்) 
உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் அருகே 34 பவுன் நகைகள் பறிமுதல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கைதான 2 பேரிடம் இருந்து 34 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாலை மலர்

மதுரை:

மதுரை மாவட்டம் சாப்டூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சலுப்பப்பட்டியை சேர்ந்த ராணுவவீரர் முத்துராஜ் வீட்டில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருட்டு சம்பவம் நடைபெற்றது.

வீட்டுக்குள் புகுந்த மர்மமனிதர்கள் அங்கிருந்த 29 பவுன் நகைகளை திருடிச்சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதேபோல் தொட்டணம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி வீட்டில 5½ வுன் நகைகள் திருட்டு போனது.

இது குறித்து பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரோஜா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரவிசாரணை நடத்தினர்.

இதில் மேலக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன்(வயது58), புளியங்குளம் ஆறுமுகம்(35) ஆகியோர் தான் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. போலீசார் 2பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34½பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.