உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே தொழிலாளி வீட்டில் 21 பவுன் நகை திருட்டு

மகளின் படிப்பு செலவுக்காக நகையை அடகு வைக்க முடிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே உள்ள பன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி. தொழிலாளி. இவரது மனைவி அண்ணம்மாள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் தங்களது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக 21 பவுன் நகை சேமித்து வைத்திருந்தனர்.

இந்தநிலையில் மகளின் படிப்பு செலவுக்காக நகையை அடகு வைக்க முடிவு செய்தனர். அவர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 21 பவுன் நகை மாயமாகி இருந்தது. மர்மநபர்கள் நகையை திருடி சென்று இருப்பது தெரிந்தது. ஆனால் வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படவில்லை.

எனவே வீட்டிற்கு அடிக்கடி வந்த சென்ற நபர்கள் நகையை திருடி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.