மோதல் நடந்த அரசு பள்ளி 
உள்ளூர் செய்திகள்

பள்ளியில் நடந்த மோதலில் மாணவர் உயிரிழந்த விவகாரம் - ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

அம்பை அருகே பள்ளியில் நடந்த மோதலில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் கோஷ்டி மோதல் தொடர்பாக 3 மாணவர்கள்மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர் செல்வ சூர்யாவுக்கும், 11ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. 

வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது செல்வ சூர்யாவை எதிர்தரப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள் கற்களால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த செல்வ சூர்யா சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். கோஷ்டி மோதல் தொடர்பாக 11-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே, அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. தீவிர விசாரணைக்கு பிறகு மாணவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அம்பை அருகே மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்ச்செல்வன், சீபா பாக்கியமேரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள்...திருவண்ணாமலை விசாரணை கைதி உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்