கைது 
உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

திண்டுக்கல்லில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாலை மலர்

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாசிலாமணி புரத்தைச் சேர்ந்தவர் கருணையானந்தம். இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். இதே போல் பழனி அருகே ஆயக்குடி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி செய்த மின்னல் வாய்க்கால்சாமியை போலீசார் கைது செய்தனர். 

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் விசாகன் வாய்க்கால்சாமி மற்றும் கருணையானந்தத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.